நல்லுாா் ஆலய சுற்றாடலில் இயங்கிய 6 வா்த்தக நிலையங்களுக்கு நடவடிக்கை..! காலாவதியான தீன் பண்டங்கள் விற்பனை..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் ஆலய சுற்றாடலில் இயங்கிய 6 வா்த்தக நிலையங்களுக்கு நடவடிக்கை..! காலாவதியான தீன் பண்டங்கள் விற்பனை..

நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தற்காலிக கடைகளில் பாவனைக்குதவாத தின் பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 

இவ்வாறு காலாவதியான தீன் பண்டங்களை விற்பனை செய்த 6 தற்காலிக கடைகளுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மேலதிக கடைகளில் பலவற்றில் 

காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து யாழ் மாநகர சபையின் பொதுச் செயலாளர் அவர்கள் 

மேற்கொண்ட திடீர் சோதனையில் 6 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு காணப்பட்ட காலாவதியான பொருட்களை கைப்பற்றிய போது சுகாதார உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் 

வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதன் போது 6 வர்த்தக நிலைய உரிமையாளர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் 39 ஆயிரம் ரூபா 

தண்டப்பணம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு