மன்னாா்- மடு தேவாலயம் சென்ற வாகனம் விபத்து..! 9 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor
மன்னாா்- மடு தேவாலயம் சென்ற வாகனம் விபத்து..! 9 போ் படுகாயம்..

செட்டிகுளம்- ஆண்டியா புளியாலங்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 9 போ் படுகாயமடைந்துள்ளனா். 

வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வேன் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் 

அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் பயணித்த நிலையில் 9 பேர் படுகாயமடைந்து

செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×