பேருந்து நிலையத்தில் குற்றுயிராய் கிடந்த நபா் உயிாிழப்பு..! குற்றவாளிகளை தேடி வலைவீச்சு..

ஆசிரியர் - Editor
பேருந்து நிலையத்தில் குற்றுயிராய் கிடந்த நபா் உயிாிழப்பு..! குற்றவாளிகளை தேடி வலைவீச்சு..

களனி பேருந்து நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்காகி குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்ட நபா் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

பேருந்து நடத்துனராக பணிபுரிந்துள்ள அவரை நேற்று மாலை இனந்தெரியாத நபரொருவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் முல்லேரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் களனி – பலபிட்டிய பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் என தெரியவந்துள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபரை தேடி 

களனி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Radio
×