இன நல்லிணக்கத்திற்காக நடக்கும் மாணவா்கள்..!

ஆசிரியர் - Editor I
இன நல்லிணக்கத்திற்காக நடக்கும் மாணவா்கள்..!

பருத்துறையிலிருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தின் இரண்டாம் நாள் இன்று கிளிநொச்சியிலிருந்து மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை யாழ் பரித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடை பயணம் 

பிற்பகல் கிளிநொச்சியை சென்றடைந்தது. இன்று காலை 6ஃ30 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து குறித்த நடை பயணதம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் பயணமான இன்று வவுனியா புளியங்குளம் பகுதியில் 

நிறைவடைய உள்ளமை குறிப்பிடதக்கதாகும். கடந்த ஏப்ரல் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் நிலவிய இனங்களிற்கிடையிலான முறுகல் நிலை மற்றும் பாதுகாப்பு அற்ற நிலை காரணமாக 

சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த நிலை தற்Nபுhது இல்லை எனவும், மக்கள் மத்தியில் இனங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்படுவதை வெளிப்படுத்தவும், பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டவும் 

குறித்த நடைபயணம் இம்மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் தாம் குறித்த நடைபயணத்தை முன்னெடுப்பதன் ஊடாக நாட்டில் தற்போது உள்ள நிலையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து காட்டும் வகையிலேயே 

குறித்த நடைபயணம் தம்மால் முன்னெடுக்கப்படுவதாக அம்மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவர்களின் பயணத்தின்போது பலரும் அவர்களிற்கு உற்சாகத்தினை அளித்து வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு