32 வருடங்களின் பின் பெற்ற தாயை தேடும் உடன் பிறவாத அண்ணனும், தங்கையும்..! பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வந்தனா்..

ஆசிரியர் - Editor I
32 வருடங்களின் பின் பெற்ற தாயை தேடும் உடன் பிறவாத அண்ணனும், தங்கையும்..! பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வந்தனா்..

இலங்கையில் பிறந்து பிரான்ஸ் நாட்டவா்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட இரு பிள்ளைகள் இலங்கையில் உள்ள தத்தமது தாயை தேடி வருகின்றனா். 

இரு தாய்மாருக்கு பிறந்த பிள்ளைகள் இருவர், பிரான்ஸ் தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் சகோதரன், சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பிறந்த நிலந்திகே என்ற குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே 

பிரான்ஸ் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். குறித்த பெண் தற்போது பிரான்ஸில் நடன கலைஞராக பணியாற்றி வருகின்றார்.

1987ஆம் ஆண்டு மற்றுமொரு குழந்தையை அதே பிரான்ஸ் தம்பதியர், இலங்கையில் தத்து எடுத்துள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி 

சிறிவர்தன என்ற ஆண் குழந்தையே இவ்வாறு தத்து கொடுக்கப்பட்டுள்ளார். 32 வருடங்களில் தமது சொந்த தாய்மாரை தேடி அக்காவும் தம்பியும் 

பிரான்ஸிலிருந்து இலங்கை வந்துள்ளனர். தாய்மாரை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு