குற்றமிழைத்த இராணுவ அதிகாாிகளை தண்டிக்க அதிகாரம் இல்லை..! உண்மையை அம்பலப்படுத்திய சாலிய பீாிஸ்..

ஆசிரியர் - Editor I
குற்றமிழைத்த இராணுவ அதிகாாிகளை தண்டிக்க அதிகாரம் இல்லை..! உண்மையை அம்பலப்படுத்திய சாலிய பீாிஸ்..

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் குற்றஞ்சாட்டப்படும் இராணுவ அதிகாாிகளை சேவையிலிருந்து நீக்கும் அதிகாரம் எமக்கில்லை. நாம் அதற்கான பாிந்துரைகளை செய்தாலும் அந்த அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது. 

மேற்கண்டவாறு காணமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றில் உறவினர்களால் பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் சிலர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் நாம் அவ்வாறான அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்தோம். எனினும் அவர்கள் தற்போதும் பதவிகளில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

 காணாமற்போனோர் அலுவலகம் ஆகிய நாம் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசுக்கே உண்டு. சாதரணமாக கிராம அலுவலகர் ஒருவர் குற்றமிழைத்தால் 

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்து முடியும் வரை தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். அதே முறைமையை இங்கும் செய்ய வேண்டியது கட்டாயமாகும். எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனம் ஜனாதிபதி, 

பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கைகளில் உள்ளன. அதில் எம்மால் தலையிட முடியாது. இந்த விடயத்தில் பரிந்துரை வழங்க மட்டுமே எமக்கு முடியும். அதற்காக நாம் பரிந்துரைகளை மட்டும் செய்யும் பணியகம் என்று கருத வேண்டாம். 

இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது? என்பதை கண்டறிய முழுமையான விசாரணை செய்வதற்காகும்.எமது அலுவகத்தின் பிரதான நோக்கம் காணமற்போனவருக்கு உண்மையில் என்ன நடந்தது 

என தேடி விசாரணை செய்வதே ஆகும். சிலருக்கு இந்த கடினத்தன்மை விளங்காது. ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டவரை உடனடியாக கண்டு பிடிக்க முடியாது. நாம் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணைகளை மேற்கொண்டே உண்மையை கண்டறிய வேண்டும். 

வெளிநாடுகளில் உள்ள இவ்வாறான அலுவலகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு