திருட்டு தனமாக காணமல்போனவா்கள் அலுவலகத்தை திறக்கவேண்டிய தேவை என்ன? உறவுகள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
திருட்டு தனமாக காணமல்போனவா்கள் அலுவலகத்தை திறக்கவேண்டிய தேவை என்ன? உறவுகள் கேள்வி..

திருட்டு தனமாக அதிகாலையில் காணாமல்போனவா்கள் அலுவலகம் திறக்கவேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பியிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், எவருடைய தேவைக்காக யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பினா். 

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர 

மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தினை எதிர்த்து போராடிய போதிலும் நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா? 

அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா?பட்டப்பகலில் திறக்க வேண்டிய அலுவலகத்தினை அதிகாலையில் திறக்கவேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத்தேடி தரப்போகின்றீர்களா இல்லாவிட்டால் 

உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம். நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்திற்காகவோ சுகபோகத்திற்காகவோ போராடவில்லை. 

எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும் நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள் என்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு