கள்ள மாடு கடத்துவதற்கு அரசியல்வாதியின் சகோதாிக்கு பிரதேசசபை உழவு இயந்திரத்தை வழங்கிய தவிசாளா்..!

ஆசிரியர் - Editor I
கள்ள மாடு கடத்துவதற்கு அரசியல்வாதியின் சகோதாிக்கு பிரதேசசபை உழவு இயந்திரத்தை வழங்கிய தவிசாளா்..!

உழவு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தியது மட்டுமல்லாமல் பொலிஸாிடம் சிக்கிய உழவு இயந்திரத்தை மீளவும் முறைகேடாக மீட்பதற்கு மன்னாா் பிரதேசசபை தவிசாளா் முயற்சித்துள்ளதாக பிரதேசசபை உறுப்பினா் பா.கதிா்காமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளாா். 

இவ்விடயம் தொடர்பில் பாலசிங்கம் கதிர்காமநாதன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தின் அரசியல்வாதி ஒருவரின் சகோதரரின் 

தோட்டத்தில் வேலைகளுக்கு நின்ற எந்த விதமான பதிவிலும் இல்லாத குறித்த உழவு இயந்திரத்தில் களவாக மாடு ஏற்றி சென்ற போது தலைமன்னார் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது குறித்த உழவு இயந்திரத்துக்குரிய 

அனுமதிப்பத்திரங்கள் அற்ற நிலையில் குறித்த உழவு இயந்திரம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாரினால் அண்மையில் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இவ் உழவு இயந்திரம் மன்னார் பிரதேச சபைக்கு

சொந்தமான வாகனம் என குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு கடிதங்கள் அனுப்பி இவ் உழவு இயந்திரத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்டார்.

அதற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மீண்டும் குறித்த உழவு இயந்திரத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த வாகனம் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் எனின் இவ்வளவு காலமும் 

எங்கு நின்றது என்பது தெரியாது. தற்போது மன்னார் பிரதேச சபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பல தன்னிச்சையான முடிவுகளையும் சபைக்கு அறிவிக்காமல் 

செய்து வருவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் 17ஆவது கூட்டம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பாக 

சபையில் முன் வைத்து உரை நிகழ்த்தினேன். எனது கருத்து சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே குறித்த உழவு இயந்திரம் மீண்டும் மன்னார் நீதிமன்றத்துக்கே ஒப்படைக்க வேண்டும். இந்த உழவு இயந்திரம் ஒருவரின் தனிப்பட்ட பாவனையில் 

இவ்வளவு காலமும் இருந்து வந்ததுடன் சட்விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தபட்டு வந்துள்ளதாக அறிகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு