அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது..! கைதுகள் தொடரும் என எச்சாிக்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது..! கைதுகள் தொடரும் என எச்சாிக்கிறது பொலிஸ்..

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் தீவிரவாத நடவடிக்கைளுடன் தொடா்புடைய சந்தேகநபா்களை கைது செய்யும் நடவடிக்கையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது. என பொலிஸ் பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா். 

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலை அடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நேற்றைய தினம் முதல் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உள்நாட்டு 

அடிப்படைவாத அமைப்பான தேசிய தௌவீத் ஜமாத்தின் தலைவரான சஷ்ரான் ஹாசீமின் தலைமையில் கொடூரத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், 

நீர்கொழும்பு கட்டுவாவிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு புனித சீயொன் தேவாலயம் ஆகியவற்றின் மீதும், கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர யோட்டல்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இதனால் 250 க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.உலக நாடுகளையும் பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளிய இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஏப்ரல் 22 ஆம் திகதி உடனடியாக 

அரசு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது. இம்முறை பொலிசாருக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் விசேட அதிகாரங்களான சோதனை செய்தல், கைதுசெய்வது மற்றும் தடுத்து வைத்திருப்பதற்கான 

அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருக்கும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதற்கமைய பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினர் 

நாடு தழுவிய ரீதியில் பெரும் எடுப்பில் சுற்றிவளைப்புத் தேடுதல்களையும், சோதனைகளையும் முன்னெடுத்து சந்தேகத்தின் பேரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர். இவர்களில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 

மற்றும் தாக்குதல்களுக்கான பிரதான சூத்திரதாரியான சஸ்ரான் ஹாசீமின் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் 200 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி, 

பிரதமர் ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும் தொடர்ந்தும் நாடு தழுவிய ரீதியில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவரும் இராணுவத்தினரும் பொலிசாரும் தொடர்ந்தும் பலரை கைதுசெய்துவருகின்றனர்.

இந்த நிலையிலேயே கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22 ஆம் திகதியான நேற்று முன்தினம் நள்ளிரவு வரை மாதாந்தம் நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்காதிருக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் 

அரசாங்கமும் தீர்மானித்திருக்கின்றது.இதற்கமையவே நேற்று முன்தினம் நள்ளிரவுடன் மேலும் ஓரு மாதகாலத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை என்று 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, 

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்தல், விசாரணை செய்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கை என்பன தொடர்ச்சியாக இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு