கனடா செல்லும் வழியில் உயிாிழந்த இளைஞன் யாழ்.கோப்பாய் பகுதியை சோ்ந்தவா்..! சடலத்தை தேடும் நடவடிக்கை ஆரம்பம்.

ஆசிரியர் - Editor I
கனடா செல்லும் வழியில் உயிாிழந்த இளைஞன் யாழ்.கோப்பாய் பகுதியை சோ்ந்தவா்..! சடலத்தை தேடும் நடவடிக்கை ஆரம்பம்.

சட்டவிரோதமாக கனடா செல்லும் வழியில் உயிாிழந்த யாழ்ப்பாண இளைஞன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

30 வயதான சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமை கைரேகை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனோருக்கான புலம்பெயர்ந்தோர் திட்டம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லை ரோந்து முகவர்களால் Rio Grande பள்ளத்தாக்கில் காணாமல் போன புலம்பெயர்ந்தோர் திட்டம் ஊடாக தேடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த திட்டத்தின் மூலம் கைரேகை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது தர்மேந்திரனின் கைரேகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கனடா எல்லை ரோந்து முகவர்களாலும், விசாரணை நடத்தியவர்களாலும் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

ஒரு மனிதாபிமான அடைப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த உயிரிழப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால் உரிய மற்றும் 

சொந்த அடையாள தகவல்களை பயன்படுத்த வேண்டும் என எல்லை ரோந்து முகவர் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் நான்கு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு