இந்த மனிதரை பாராட்டுங்கள்..! இனம், மதம், மொழி அனைத்தையும் கடந்து..

ஆசிரியர் - Editor I
இந்த மனிதரை பாராட்டுங்கள்..! இனம், மதம், மொழி அனைத்தையும் கடந்து..

வாக்களித்த மக்களையும் மதிக்காமல், அவா்களுடைய பிரச்சினைகளை தீா்க்காமல் தங்கள் வயிறு வளா்க்க துடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நோ் எதிரான பிரதி அமைச்சா் பாலித தேவபெரும குறித்து அடிக்கடி இன பேதமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படும். 

அவரே மக்களுடைய பிரச்சினைகளை தானே இறங்கி தீா்த்து வைப்பத்தில் அவருக்கு நிகரான அரசியல்வாதி இல்லை. இதற்கு சிறந்த உதாரணம் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பெருக்கு உண்டானபோது தமிழ் அரசியல்வாதிகள் வாயை மூடிக் கொண்டிருந்தபோது பாலித தேவபெருமள கிளிநொச்சியில் கிணறு ஒன்றை

தானே துப்புரவு செய்து கொடுத்து தமிழ் அரசியல்வாதிகளை செருப்பால் அடித்த கதை அனைவருக்கும் தொியும். அவ்வாறானதொரு சம்பம் தொடா்பில் முஹமட் நாவ்ஸா் என்பவா் தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்த விடயத்தை அப்படியே இங்கே தருகிறோம். 


நேற்று முன்தினம் துறைமுக அதிகாரசபையில் சில இளைஞர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது. அதில் ஒரு ஆறு இளைஞர்கள் நான் கடமையபரியும் பேலியகொட கொல்கலன்களை கையாளும் இடத்துக்கு வந்தனர்.

இங்கு என்னோடு இருக்கும் இளைஞன் அமைதியாக நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் கேட்டு தெரிந்து கொண்டான். 
என் மகனின் வயதுடைய ஒருவன் என்பதால் சில புத்திமதிகளை சொல்லிக்கொடுத்தேன்.

தனது உழைப்பில் ஒரு வீட்டைக்கட்டிக் கொள்வதும், ஒரு வாகனம் வாங்குவதும்தான் தனது திட்டம் என்று சொன்னான்.
நானும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பிறகுதான் தெரியவந்தது அவன் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெறும என்பவரின் மகன் என்று.

அவனிடம் தனது அப்பா ஒரு பிரதியமைச்சர் என்ற மமதையையோ கர்வத்தையோ காணமுடியவில்லை.

அது பற்றி யாரிடமும் சொல்லவுமில்லை

மீண்டும் அவனை நீ ஏன் இப்படியான சாதாரண பதவிக்கு வந்தாய் அப்பாவின் அரசியல் செல்வாக்கை வைத்து பெரிய விடயங்களை சாதிக்கலாமே என்று கேட்டதற்கு..

எங்கள் அப்பாவும் அப்படியில்லை நானும் அப்படியில்லை இப்படி வேலை செய்து அனுபவப்பட்டு முன்னேறவே விரும்புகிறேன் என்றான்.

இந்த விடயத்தை படித்தும் தமிழ் அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். மக்களின் பெயரால், இனத்தின் பெயரால் வயிறு வளா்த்ததுபோக தங்கள் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புக்களை தேடி கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். சந்தா்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தும் தவறு செய்யாமல் இருப்பவனே

உண்மையில் துாய்மையானவன். சிங்கள இனத்தை சோ்ந்தவரானாலும் மிக நோ்மையாக செயற்படும் மனிதரை பாராட்டுங்கள்.

ஆசிாியா்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு