SuperTopAds

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை..! அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணி தொடா்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை..! அவா்களாக வருவாா்கள் என்கிறாா் சீ.வி..

தமிழ்தேசிய மக்கள் முன்னணி சில தனிப்பட்ட காரணங்களுக்காகவே எங்களில் இருந்து விலகி நிற்கின்றாா்கள். மிக விரைவில் அவா்கள் எங்களுடன் வந்து சேருவாா்கள். என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா். 

தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடாத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை பேரவையின் இணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரனால் நல்லூரில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்தப் பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பாக பேரவைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அச் சந்திப்புக்கள் வெற்றியளிக்காத காணரத்தினால் இந்த பரப்புரையில் 

முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் விக்கினேஸ்வரனிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது. இவ்வாறான பிரச்சனை தற்போது தமிழ் மக்கள் பேரவைக்கு அதற்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணிக்கு இருந்து வந்தது 

அதனை நாங்கள் பெரிதாக எடுப்பதில்லை. ஏனென்றால் கொள்கை ரீதியாக அவர்கள் எங்களோடு சேர்ந்தவர்கள். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் விடுபட்டு நிற்கின்றார்கள்.  ஒரு காலத்திலே அவர்களும் வந்து

எங்களோடு சேருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆகையினால் அதைப்பற்றி இப்பொழுது பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தான் கருதுகின்றேன் என்றார். இதேவேளை கடந்தமுறை யாழிலும் 

மட்டக்களப்பிலும் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்து கொண்டிருந்தது. ஆனால் அண்மைக்காலத்தில் முன்னணிக்கும் பேரவைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால் முன்னணியினர் 

பேரவைக் கூட்டங்களுக்கும் செல்வதில்லை.  அந்த நிலையில் தான் பேரவைக்கும் முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. அத்தகைய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலையே அவர்கள் 

இந்தப் பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.