பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டாதீா்கள்..! சீ.வி. கருத்து..

ஆசிரியர் - Editor I
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டாதீா்கள்..! சீ.வி. கருத்து..

சவேந்திர சில்வாவுக்கு இராணுவ தளபதி பதவியை வழங்கிய பின்னா் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் திறப்பதால் உண்டான பயன் என்ன? என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளாா். 

மேற்படி விடயம் தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி மேலும் கூறியுள்ளதாவது, “ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை. 

தற்போது யாழில் அதன் அலுவலகத்தை திறக்க எடுக்கும் முயற்சி வெறும் கண் துடைப்பு.காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது தெளிவான எந்த இலக்குகளோ, 

கால அட்டவணையோ இல்லை. இந்த அலுவலகத்துக்கு முறையிடப்படாத ஏராளமான காணாமல் போன சம்பவங்கள் இருக்கின்றது. ஆனால், அவை குறித்து இந்த அலுவலகம் கரிசனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

வெறுமனே கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவதற்கான உண்மையான தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அதேபோல காணாமல் போன உறவினர்கள் 

குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் தொடர்புக்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை.எனவே, சர்வதேச நாடுகளையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவையும் ஏமாற்றும் வகையில் 

இந்த அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஒரு கண் துடைப்பாகும்.ஆகவே, அரசாங்கம் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு