புற்றுநோய் கழிவுகள் தெல்லிப்பழையில் கொட்டப்பட்டமை தொடா்பில் விவாதம்..! பிரதேசசபை கூட்டத்தில் காரசாரம்..
புற்றுநோய் மருத்துவ கழிவுகளை தெல்லிப்பழையில் கொட்டியது தவறு என வலி,வடக்கு பிரதேசசபையின் 16வது கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் 16 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது, கீரிமலை பகுதியில் யாழ். மாவட்ட கழிவுகளைக் கொட்டுவதற்கு கொரிய அரசால் திட்டம்
முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிராகவும் சபையில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் கழிவுகளை எரியூட்டும் செயற்பாடு தொடர்பிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எரிக்கப்படும் குப்பையின் புகை 80 அடியில் வௌியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், 30 அடி உயரத்தில் வௌியேற்றப்படுவதாகவும்
இதற்கு சரியான மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சஜீவன் குறிப்பிட்டார்.