SuperTopAds

வைக்கோலுக்கு தீ வைத்தால் தண்டணை..! கிளிநொச்சி கமநலசேவை திணைக்களம் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
வைக்கோலுக்கு தீ வைத்தால் தண்டணை..! கிளிநொச்சி கமநலசேவை திணைக்களம் எச்சாிக்கை..

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கபபடவுள்ளதாக 

கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச்செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது வீதமான காணிகள் 

அறுவடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலுக்கு தீ வைத்து வருகின்றனர். இயற்றைப்பசளையாக காணப்படுகின்;ற இந்த வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டு வருகின்றது.

இவவாறு வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலை தீ வைத்துக் கொழுத்தவேண்டாம் என பலதடவைகள் கமநலசேவை நிலையத்தால் அறிவித்தல் விடுத்தபோதும் விவசாயிகள் வைக்கோலுக்கு தீ வைத்து வருகின்றனர்.

அறுவடை மேற்கொண்ட வயல் நிலங்களில் வைக்கோக்கு தீ வைக்க வேண்டாம் என்றும் அவ்வாறு தீ வைக்கும் விவசாயிகள் பற்றிய விபரங்களை கமநலசேவை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பிரதேச கமக்கார அமைப்புக்களை கமநலசேவை நிலையம் கேட்டுள்ளதுடன், 

இவ்வாறான விவசாயிகள் அடையாளம் காணும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என கமநலசேவை நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.