முல்லைத்தீவில் காட்டு யானைகள் அட்டகாசம்..! வாய் பாா்த்துக் கொண்டிருக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் பொதுமக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (21-08-2019) காடடுயானைகள் புகுந்து பெருமளவான பயிர்களை அழித்துள்ளன. மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த யானைகள்
பயன்தரு நிலையில் இருந்த தென்னை மரங்களை அழித்துள்ளன. இரவு புகுந்த யானைகளை மக்கள் விரட்டியபோதும் மக்களை யானை விரட்டியதாகவும் இதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் ஆபாய நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த பிரதேசத்தில் யானைவேலிகளை அமைத்துத்தர தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளன.