SuperTopAds

காற்றினால் துாக்கி வீசப்பட்ட கூரைகள்..! 19 வருடங்களின் பின் மீள் குடியேறிய மக்கள் நடுத்தெருவில்..

ஆசிரியர் - Editor I
காற்றினால் துாக்கி வீசப்பட்ட கூரைகள்..! 19 வருடங்களின் பின் மீள் குடியேறிய மக்கள் நடுத்தெருவில்..

கிளிநொச்சி- பச்சிளைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான முகமாலை இந்திரபுரம் பகுதியில் நேற்று (21-08-2019) மாலை வீசிய கடும் காற்றினால் மீள் குடியேறிய மக்களின் குடிசைகள் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி- பச்சிளைப்பள்ளிபிரதேசத்திற்குட்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான முகமாலை இந்திரபுரம் பகுதிகளில் நேற்றையதினம் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினாலும் கற்றினாலும் மீள்குடியேறியுள்ள 

மக்களின் தற்காலிக குடிசையின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது அத்துடன் அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு காற்றின் காரனமாக 10இற்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வாறு காற்றினால் சேதமடைந்துள்ளன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம்காரணமாக 2000ம்ஆண்டில் இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பத்தொன்பது வருடங்களுக்குப்பின்னர் சொந்த நிலத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதியாகக் 

காணப்பட்ட இப்பிரதேசத்தில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியதைத்தொடர்ந்து இவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.