13 உணவு கையாளும் நிலையங்களுக்கு சா்வதேச தர சான்றிதழ்..! வடமாகாணம் சாதனை..
வடமாகாணத்தில் உள்ள 13 உணவு உற்பத்தி மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களுக்கு சா்வதேச தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.வா்த்தக தொழிற்துறை மன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, இலங்கை அரசும் ஜேர்மன் அரசும் உணவு உற் பத்தி, பதப்படுத்தல், மென்பான உற்பத்தி போன்ற உணவு கையாளும் நிலையங்களுக்கான பன் னாட்டு தர (ஜி.எம்.பி) சான்றிதழ் வழங்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டன.
இது 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை பல கட்டங்களாக நடைமுறைப்படுத் தப்பட்டுவருகிறது. பன்னாட்டு உணவு உற்பத்தியில் பயன்படும் தொழில்நுட்பம்,தரம், உணவு விஞ்ஞானம்,சுகாதாரம் உட்பட பல்வேறு விடயங்கள் அவதானிக்கப்பட்டு,
பயிற்சிகள் வழங்கப்பட்டு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றம்,பி.ரி.டி ஜேர்மன் நிறுவ னம்,மாகாண சுகாதாரத் திணைக்களம்
ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தி ருந்தன. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 370 நிறுவனங்கள் முதற் கட்டப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டன.
பயிற்சியின் பின்னர் 22 நிறுவனங்கள் பன்னாட்டு தரச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 13 உணவு கையாளும் நிலையங் களுக்கு பன்னாட்டு தர உணவு நியம சான்றிதழ் தற் போது வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,கிளிநொச்சி 1,வவுனியா 4 உட்பட 13 நிறுவனங்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் எ1 ராஜா கிறீம் கவுஸ், அம்பாள் வெதுப்பகம், எவர் ரீ புரூட்ஸ் பிறைவேட் லிமிட்டெட்,
ஜசுபி, லிங்கன் கூல் பார், சுபாஷ் வெதுப்பகம்,ரைற்ராணிக் ரெஸ்டோரண்ட், விண்மீன் ரென்ஸ் ரோடன்ட் வெதுப்பகம் ஆகியனவும், கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதி ஸ்டார் ஹோட்டலும், வவு னியா மாவட்டத்தில் ஹோட்டல் நெலி ஸ்டார் பிரைவேட் லிமிட்டெட்,
றோயல் கார்டன் கெஸ்ட் கவுஸ், வன்னி இன், யாழ்.ஐஸ் கிறீம் பிரைவேட் லிமிட்டெட் என்பனவும் பன்னாட்டு தர உணவு நியமச் சான்றிதழைப் பெற்றுள்ளன.