நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனை அச்சுறுத்தும் முயற்சி படுதோல்வி..! மூக்குடைபட்ட இராணுவம்.

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனை அச்சுறுத்தும் முயற்சி படுதோல்வி..! மூக்குடைபட்ட இராணுவம்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று காலை பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனா். குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 

பாதுகாப்பு தரப்பினர் குவிந்திருந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக என்பதால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே 

இவ்வாறு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டிருந்தனர். குறித்த தேடுதலிற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டிருந்தது. குறித்த தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும்

அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும். இந்நிலையில் பகல் 12 மணியளவில் கிளnpநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதை அடுத்து அப்பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் இல்லத்திற்கு அண்மையில் உள்ள அவரது சகோதரரான சிறிகுகன் அவர்களினுடையது என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த காணியில் இரு வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பபட்டபோதிலும் எவையும் கிடைக்காத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு