நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் மின்சாரம் தாக்கி முதியவா் ஆபத்தான நிலையில்..!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற பக்தா் ஒருவா் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றிருப்பதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு
சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கபட்டு வருகிறது.
என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.