புத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை!

ஆசிரியர் - Admin
புத்தளை வழியாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் யானை!

பத்து வருடங்களாக புத்தளை வழியாக கதிர்காமம் செல்லும் பிரதான பாதை தனிவழி பாதையாக மாற்றியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த யானை சுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளைக்கும் செல்லகதிர் காமத்திற்கும் இடையில் பிரதான பாதையினை மறைத்து நிற்பதாகவும் இந்த யானைக்கு சாப்பிடுவதற்கு எதனையாவது தந்த பின் வழிவிடுவதாகவும் இதனை பொது மக்கள் தங்கள் பயணத்தினை மேற்கொள்வதற்கு தொடர்ந்த இந்த பணியினை மேற்கொள்வதனால் அது தற்போது வழமைக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கையூட்டல்கள் பெறுவதை இதற்கு முன் மனிதர்களே பெற்றுகொண்டு வாகனங்களை அனுப்புவதாகவும் தற்போது இவ்வாறு ஒரு யானை தனது வயிற்று பிழைப்புக்கு கையூட்டல்களை பெற்றுக்கொள்வதாக பொது மக்கள் கேலியாக தெரிவிக்கின்றனர். 

எது எவ்வாறான போதிலும் குறித்த யானை காட்டில் அலைந்து திரிந்து சாப்பிடாமல் ஒரே இடத்தில் இருந்து தனது உணவினை தேடிக்கொள்வதனால் இதன் ஆயுள் காலம் குறைந்து விடும் என பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு