இனியொருபோது இது நடக்காதிருக்கட்டும்..! உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

ஆசிரியர் - Editor I
இனியொருபோது இது நடக்காதிருக்கட்டும்..! உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

கண்டியை சோ்ந்த இளம் தாய் தன் இரு குழுந்தைகளுடன் புகைரதத்தில் தரையில் உட்காா்ந்து கொழும்புவரை பயணித்த சம்பவம் இலங்கையா்களின் மனச்சாட்சியை உலுக்க தொடங்கியுள்ளது. 

கண்ணீரை சிந்த வைக்கும் இந்த காட்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.கடந்த சனிக்கிழமை கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் நகர்சேர் கடுகதி புகையிரதத்தின் 

இரண்டாம் வகுப்பிற்கான பயணச்சீட்டை தாயொருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.பிறந்து சில மாதங்களேயான குழந்தை மற்றும் மூன்று வயது நிரம்பிய சிறுவனுடன் அவர் புகையிரதத்தில் ஏறியுள்ளார். எனினும் அவர்களுக்கு ஆசனங்கள் கிடைக்காததால், 

அந்த தாய் தனது பிள்ளைகளுடன் புகையிரதத்தில் தரையில் அமர்ந்து கொழும்பு வரையில் பயணித்துள்ளனர். குழந்தையுடன் வந்த அந்த தாய்க்கு மனிதாபிமான முறையில் ஒரு ஆசனத்தை கூட கொடுக்க யாரும் முன்வரவில்லை 

என்பது கலைக்குரிய விடயம் என சமூக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு