நெல்லியடி- துன்னாலை வீதியில் கஞ்சா கடத்தல்காரா்களை விரட்டிய விசேட அதிரடிப்படை..! இறுதியில் ஏமாற்றமாம்..

ஆசிரியர் - Editor I
நெல்லியடி- துன்னாலை வீதியில் கஞ்சா கடத்தல்காரா்களை விரட்டிய விசேட அதிரடிப்படை..! இறுதியில் ஏமாற்றமாம்..

யாழ்.நெல்லியடி பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற வாகனத்தை விசேட அதிரடிப்படையினா் துர த்தி சென்றதால் அப்பகுதியில் நெல்லியடி- துன்னாலை பகுதியில் நேற்றிரவு பதற்றம் நிலவியது. 

65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி – துன்னாலை வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 

அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர், கப் ரக வாகனத்தைத் துரத்திச் சென்றனர். 

எனினும் அதில் பயணித்தவர்கள் கஞ்சா பொதிகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். 65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டன. 

அவை நெல்லியடிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கப் ரக வாகனம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை தேடி 

சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு