தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்கியை போட்டியில் இறக்க சம்பந்தி ஆர்வம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் வாக்குகள் குறிப்பித்தக்களவு குறைவடையும். எனவே, விக்னேஸ்வரன் போட்டியிட்டால் பொதுஜன முன்னணியின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும்.
ஆனால் வினேஸ்வரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது சமூகத்தில் கதையொன்று மாத்திரமே நிலவுவதாகவும் அவர் கூறினார்.