கடலை நிரவி விமான ஒடுதளத்தை அமையுங்கள்..! மாவை சேனாதிராஜா அறிவுரை..
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பின்போது மக்களுக்கு சொந்தமான காணி களை சுவீகாிக்காமல் கடலை நிரவி ஓடுபாதையை விாிவாக்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கோாிக்கை விடுத்துள்ளாா்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் தலைமை அமைச்சர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி நடந்துகொண்டிருக்கின்றது. வானூர்தி நிலையத்துக்கான ஓடுதளம் விரிவாக்கப்படுமாயின், மக்களின் காணிகள் சில வற்றைச் சுவீகரிக்கவேண்டிவரும்.
அது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது என்று அறிகின்றேன். காணி சுவீகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளத்தை விரிவாக்க வேண்டுமாயின் வானூர்தி நிலையத்தின் வடக்குப் பக்கமாகவுள்ள கடற் பகுதியை நிரவி அதனூடாக ஓடுதளத்தை அமைக்க முடியும். என்றார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், வானூர்தி நிலைய அபிவிருத்தியின்போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வதுபோல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது
தொடர்பாக நாமும் சிவில் வானூர்திப் போக்குவரத்துத் துறையினர் போன்ற பல தரப்புக்களுட னும் பேசி முடிவுக்கு வரமுடியும் – என்றனர்.