SuperTopAds

குருநகா் மீன்பிடிதுறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காணவில்லை..! 6 முக்கிய கோாிக்கைகளை முன்வைத்த மாநகர முதல்வா்..

ஆசிரியர் - Editor I
குருநகா் மீன்பிடிதுறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காணவில்லை..! 6 முக்கிய கோாிக்கைகளை முன்வைத்த மாநகர முதல்வா்..

மத்திய அரசாங்கத்தின் 2015ம் ஆண்டுக்கான பாதீட்டில் குருநகா் மீன்பிடி துறைமுகத்தின் புனரமைப்பிற்கான நிதி ஒதுக் கப்பட்டபோதும் அது பின்னா் காணாமல்போயுள்ளதாக யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், 

குருநகா் மீன்பிடி துறைமுகம் புனரமைத்து கொடுக்கப்படும் என பிரதமா் உறுதியளித்துள்ளாா். பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூட த்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. 

இதன்போதே மாநகர முதல்வா் மேற்கண்டாவறு சுட்டிக்காட்டினாா். மேலும் அவா் அங்கு கூறுகையில், மத்திய அரசின் 2015ம் ஆண்டு பாதீட்டில் அப்போதைய நிதி அமைச்சாினால், குருநகா் மீன்பிடி துறைமுகத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது. 

ஆனாலும் பின்னா் அந்த நிதி காணாமல்போயுள்ளது. என்றாா் இதன்போது கருத்து தொிவித்த பிரதமா் குருநகா் மீன்பிடி துறைமுகத்தை விசேட செயற்றிட்டமாக எடுத்துக் கொண்டு புன ரமைத்து தருவதாக உறுதியளித்தாா். 

தொடா்ந்து மாநகர முதல்வா் கூறுகையில், கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோர பகுதிகளில் மக்கள் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கி ன்றனா். அவா்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. 

1977ம் ஆண்டு கடலை நிரவி இந்த மக்களுக்குாிய குடியிருப்புக்க ளை அமைக்க சகல திட்டங்களும் இடப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் அதனையும் கவனத்தில் எடுத்து தொிவு செய்யப்பட்ட சுமாா் 500 குடும்பங்களுக்கு 

1977ம் ஆண்டு செய்யப்பட்ட திட்டத்தின் படி ஒரு மாடி அல்லது இரு மாடி குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கவேண்டும் என கூறினாா். அதற் கு பதிலளித்த பிரதமா் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இந்த விடயம் தொடா்பாக பேசி, 

உத்தேச மதிப்பீட்டு அறிக்கை ஒன்றிணை வழங்குமாறு கோாினாா். இதேவேளை கூட்டத்தின் பின்னா் முதல்வா் ஊடகங்க ளுக்கு கருத்து கூறுகையில், பிறேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட குருநகா் 5 மாடி கட்டிடத்தின் 

அடித்தளம் பாதுகாப்பற்ற ஒன்றாக மாறியிருக்கின்றது. வீடமைப்பு அதிகாரசபை அதிகாாிகள். குறித்த மாடி கட்டங்களில் இருக்கவேண்டாம். என அறிவுறுத்தியுள்ளனா். அதனடிப்படையில் குறித்த கட்டிடத்தை உடனடியாக புனரமைத்து தருமாறு 

நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) கேட்டிருந்தோம். அதனோடு 6 முக்கிய கோாிக்கைகளை நாம் பிரதமாிடம் வைத்துள்ளோம் என கூறியுள்ளாா்.