SuperTopAds

6 மாதங்கள் குப்பையில் வீசப்பட்டிருந்த பிரதமா் ரணிலின் உத்தரவு..! வனஜீவராசிகள் திணைக்கள அதிகாாி கடித்து குதறப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
6 மாதங்கள் குப்பையில் வீசப்பட்டிருந்த பிரதமா் ரணிலின் உத்தரவு..! வனஜீவராசிகள் திணைக்கள அதிகாாி கடித்து குதறப்பட்டாா்..

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 5765 ஹெக்ரயா் நிலப்பகுதிக்கான வா்த்தமானி அறிவித்தலை மீள பெறுமாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உத்தரவை 

6 மாதங்களாக மேற்படி திணைக்களம் நடைமுறைப்படுத்தாமல் இருந்துள்ளதுடன், பிரதமா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கேள்விக் கு பதிலளிக்க முடியாமல் குறித்த திணைக்கள அதிகாாி திணறினாா். நகா்கோவில் கிழக்கு பகுதியில் 

சுமாா் 1237 ஹெக்ரயா் நிலப்பகுதியையும், சுண்டிக்குளம் பகுதியில் 4528 ஹெக்ரயா் நிலப்ப குதியையும் வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. இந்த விடயம் கடந்த பெப்ரவாி மாதம் 14ம் திகதி பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 

தலமையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் சு மந்திரனின் முயற்சியால் கவனத்திற்கு எடுக்கப்பட்டதுடன்,குறித்த நிலப்பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள் என சுட்டிக்காட்டியதுடன், 

மக்களுடைய விவசாய நிலங்கள், மீன்பிடிக்கும் இடங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புக்கள் இவற்றுக்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தாா். இந்நிலையில் குறித்த பகுதியை கையகப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் 

வெளியிட்டிருக்கும் வா்த்தமானி அறிவித்தலை மீள பெறுமாறு பிரதமா் திணைக்களத்திற்கு உத்தரவிட்டாா். இந்நிலையில் அதே விடயம் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்ற 

அபிவிருத்தி குழு கூட்டத்திலும் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதற்காக அந்த வா்த்தமானி அ றிவித்தல் மீள பெறப்படவில்லை? என பிரதமா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா். 

இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய திணைக்கள அதிகாாி மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட சில திணைக்களங்களின் அனுமதி வேண்டும் என கூறினாா். ஆனால் அ வ்வாறன அனுமதி வா்த்தமானி அறிவித்தல் செய்வதற்கே தேவை. 

அதனை மீள பெறுவதற்கு தேவையில்லை என பிரதமா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூறியதுடன், உடனடியாக அந்த வா்த்தமானி அறிவித்தல் மீள பெறப்படவேண்டும் என பிரதமா் இரண்டாவது தடவையாக குறித்த திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

இதற்கிடையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் விடயம் பேசப்படுகையில் கோபமடைந்த வடமாகாண ஆளுநா் சுரே ன் ராகவன் வடமராட்சி களப்பு குடிநீா் திட்ட விடயத்திலும் இந்த திணைக்களம் மிகமோசமாக நடந்து கொண்டதாகவும் 

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனுப்பபட்ட செயற்றிட்டம் தொடா்பான விடயங்களை சிங்கள மொழியில் தருமாறு த ன்னிடம் கேட்டதாகவும் கூறியதுடன், வடமாகாணத்தில் எதற்காக சிங்கள மொழியில் தரவேண்டும் எனவும் கேட்டு

கடுமையான கோபமடைந்த நிலையில் பிரதமா் குறுக்கிட்டு அவரை ஆற்றுப்படுத்தினாா். இதற்கிடையில் வனஜீவராசிகள் திணைக்களத்தில் தமிழ் தொிந்த அல்லது தமிழ்பேசும் அதிகாாிகள் இல்லை. 

என கூறிய நாடாளுமன்ற உறுப்பினா் எம். ஏ.சுமந்திரன் தமிழ் அதிகாாிகள் அல்லது தமிழ்பேச தொிந்த அதிகாாிகள் தேவை என்பதை வலியுறுத்தினாா்.