யாழ்ப்பாணம்- மானிப்பாய் வீதி உள்ளிட்ட 3 வீதிகளின் புனரமைப்பு..! பிரதமருக்கு படம்போட்டு காட்டி பம்மாத்து விட்ட மாவட்ட செயலகம்..
யாழ்.குடாநாட்டில் உள்ள 3 முக்கிய வீதிகளின் புனரமைப்பு தொடா்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் பிரதமா் தலமையிலான அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்ட அதே விடயம் ஒருவிதமான மாற்றமும் இல்லாமல் நேற்றய தினம் பிரமா் தலமையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் பேசி முடிக்கப்பட்டிருக்கின்றது.
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் கடந்த பெப்ரவாி மாதம் 14ம் திகதி யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வழுக்கையாறு- புங்குடுதீவு- குறிகட்டுவான் வரையான 26.5 கிலோ மீற்றா் நீளமான வீதி சுமாா் 12000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்,
அதேபோல்யாழ்ப்பணம்- மானிப்பாய்- காரைநகா் வரையான 27.21 கிலோ மீற்றா் நீளமான வீதி 3500 மில்லியல் ரூபாய் செலவில் புனர மைக்கப்படும், மூன்றாவதாக யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்துறை வரையான 55.38 கிலோமீற்றா் நீளமான வீதி 4000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என கூறப்பட்டதுடன்,
இதற்கான கேள்வி கோரல்கள்விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதே வீதிகள் தொடா்பாக நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் பிரதமா் தலமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பேசப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு முன்னா் திரையிட்டு காண்பிக்கப்பட்ட அதே செயற்றிட்ட வரைபுகள் காண்பிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாாி எழுந்து நின்று குறித்த வீதிகளின் புனரமைப்புக்காள கேள்விக ள் கோரப்பட்டுள்ளது. என கூறினாா். மேற்படி வீதிகளின் புனரமைப்பு எப்போது தொடங்கும் என கடந்த கூட்டத்தில் நாடா ளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேட்டதுபோல் 6 மாதங்களுக்கு பின்னா் நாடாளுமன்ற உறுப்பினா்