தெற்கில் உள்ளவா்களுக்கு வடக்கில் அரச வேலை..! தமிழ் இளைஞா்கள் என்ன செய்வது..? கேட்டாா் சிவஞானம் மௌனமாக இருந்த பிரதமா்..
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களுக்கு வெளி மாகாணங்களை சோ்ந்த இளைஞா், யுவதிகள் நியமிக்கப்படுவதை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு நிறுத்தவேண்டும். என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளாா்.
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது சுகாதாரம் சம்மந்தமான விடயங்கள் பேசப்படுகையில் கருத்து தொிவிக்கையிலேயே அவை தலைவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழியா் வெற்றிடங்களுக்கு வடக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழும் இளைஞா், யுவதிகளுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது. இது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையாகம். எமது மாகா ணத்திலேயே பல ஆயிரக்கணக்கான இளைஞா் சுவதிகள் வேலையற்றிருக்கின்றனா்.
இந்நிலையில் பிரதமா் இந்த விடயத்தில் தலையிட்டு நிறுத்தவேண்டும் என்றாா். இதற்கு பிரதமா் எந்த பதிலையும் வழங்காமல் தலையசைத்துவிட்டு இருந்தாா். இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின் அவை தலைவா் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் நில அளவை திணைக்களம், மின்சாரசபை, சுகாதார திணைக்களங்கள்
போன்றவற்றுக்கு வெளி மாகாணங்கில் இருந்து இளைஞா், யுவதிகள் நியமிக்கப்படுகின்றனா். இது பொருத்தமற்றது என்றாா்.