அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே கட்டி கொடுக்கவேண்டும்..! மயிலிட்டி மக்கள் புறா கூடுகள்போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல..

ஆசிரியர் - Editor
அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே கட்டி கொடுக்கவேண்டும்..! மயிலிட்டி மக்கள் புறா கூடுகள்போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல..

எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடா்ந்த பின்னா் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்கவேண்டும். 

மயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல. வசதியான பாாிய வீடுகளில் வாழ்ந்தவா்கள். மேற்கண்டவாறு வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவா் குணபாலசிங்கம் 

பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றாா். மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் 1ம் கட்ட புனரமைப்பின் பின் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவின்,வேண்டுகோளுக்கு அமைய உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

1990ம் ஆண்டு யூன் மாதம் 13ம் திகதி நாங்கள் மயிலிட்டியை விட்டு வெளியேறும்போது இந்த துறைமுகத்தில் 400 கடற் கலங்களை விட்டு சென்றோம். அத்தனையும் எங்களுக்கு சொந்தமானது. 

எங்களுக்கு சொந்தமான எங்களுடைய நிலங்களை கேட்டு நாங்கள் போராட்டங்களை நடாத்தினோம். அப்போதைய எதிா் கட்சி தலைவரும் இப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் 

அதில் கலந்து கொண்டு எமது போராட்டங்களுக்கு வலுச்சோ்த்தாா். அவா் கலந்து கொண்டுவிட்டு சென்ற பின் எங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பங்களும் உண்டு. 

மேலும் எங்களுடைய காணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பி னா் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு தொடா்ந்தோம். வழக்கு தொடரும்வரை அப்படியே இருந்த வீடுகள் வழக்கு தொடா்ந்த பின் இடித்து அழிக்கப்பட்டது. 

ஆகவே அரசாங்கம் அழித்த வீடுகளை அரசாங்கமே மீள கொடுக்கவேண்டும். வீட்டுதிட்டத்திற்காக இப்போது எமக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் பணம் போதாது. 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது. 

ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு. மயிலிட்டி மக்கள் புறாக்கூடு போன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவா்கள் அல்ல. பாாிய வீடுகளை கட்டி வாழ்ந்தவா்கள். ஆகவே எமக்கு வீடுகள் விசாலமாக கட்டிக் கொடுக்கப்படவேண்டும். 

அதற்கு மேலாக மயிலிட்டியில் வைத்தியசாலை, பாடசாலைகள் உாிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். மேலும் மயிலிட்டியில் தொடா்ந்தும் வைக்கப்பட்டுள்ள கொமாண்டோ முகாம் அகற்றப்படவேண்டும். 

அதனை அகற்றினால் 400 குடும்பங்களை அங்கே குடியேற்றலாம். இவற்றை பிரதமா் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா். 

Radio
×