மயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்..! 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor
மயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்..! 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்..

வலிகாமம் வடக்கில் மயிலிட்டி வடக்கு (ஜே 246 ) கிராம சேவையாளர் பிரிவில் மீள்குடியேறிய, இந்தியாவில் இருந்து மீள்திரும்பியோருக்கான வீட்டுத்திட்ட நினைவுக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் கட்டி முடிந்த 6 வீடுகளை . பிரதமர், அரச அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், மாவைசேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், திரு.வீ.சிவஞானசோதி, ஆகியோர் வைபவரீதியாக திறந்துவைத்தனர்.

இந்த வீடுகள் அமைக்க பிரதமரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Radio
×