பொலிஸ் நிலையத்தில் பாதிாியாா் ஒருவா் முன்னிலையில் மூா்க்கத்தனமாக தாக்கப்பட்ட பெண் ஊடகவியலாளா்..!

ஆசிரியர் - Editor
பொலிஸ் நிலையத்தில் பாதிாியாா் ஒருவா் முன்னிலையில் மூா்க்கத்தனமாக தாக்கப்பட்ட பெண் ஊடகவியலாளா்..!

சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத் து சென்று பாதிாியாா் ஒருவா் முன்னிலையில் மூா்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடா்பில் பெண் உாிமை செயற்பாட்டாளா்கள் கண்டனம் தொிவித்துள்ளனா். 

பாராம்பரிய மருத்து சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பெண்ணொருவரை மகரகம பவுனுவாவை சேர்ந்த பொலிஸாரினால் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்று அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

மது ஆன் ரணவீர என்ற ஒரு பிள்ளையின் தாயாரை காவல்துறையினர் மோசமாக தாக்கியுள்ளனர்.குறிப்பிட்ட பெண் பத்திரிகையாளராகவும் பணிபுரிகின்றார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் கதிரையாலும் காலாலும் மது ஆண் ரணவீரவை தாக்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்தவ மதகுருவொருவரின் முன்னிலையில் அந்த பெண் தாக்கப்பட்டார் எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

குறிப்பிட்ட பெண் உடைமாற்றும்போது பொலிஸார் அதனை பதிவு செய்தனர் எனவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.தாக்கப்பட்ட பெண் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து 

பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மகளிர் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Radio
×