கம்பரெலிய திட்டத்தில் மோசடி நடந்ததா..? அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்கிறாா் யாழ்.மாவட்ட செயலா்..
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் துரித கிராம எழுச்சித் திட்டமான கம்பரலிய திட்டத்தில் எங்குமே மோசடி இடம்பெறவில்லை. என மாவட்ட செயலாளர் என்ற வகையில் என்னால் உறுதியாக தெரிவிக்க முடியும் என மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
குறித்த திட்டத்தில் பல இடங்களில் வடமாகாண பூராகவும் மோசடி இடம்பெறுவதாக கூறப்படுவது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பான மாவட்ட செயலாளா் நா. வேதநாயகன்
மேலும் விவரம் தெரிவிக்கையில், ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் தற்போது என்னால் எதையும் உறுதியாக கூறமுடியாத போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எந்தப் பிரதேச செயலாளர் பிரிவிலும் இதுவரை கம்பரலிய திட்டத்தின் கீழ்
எந்தவிதமான ஒரு மோசடியும் இடம்பெறவில்லை என்பதனை உறுதியாக தெரிவிக்க முடியும் ஏனெனில் இந்த மாவட்டத்தின் செயலாளர் என்ற பொறுப்பு மிக்க பதவியிலிருந்து நான் இதனை உறுதியாக கூறுகின்றேன்.
யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் மிக அதிகமாக தற்போது முன்னெடுக்கும் இத்திட்டம் தொடர்பில் பலரும் பல கருத்துக்களை கூறினாலும் அத்திட்டத்தின் தேவை கருதி நாம் மிக வேகமாகவே அதனை முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறு மக்களுக்கு கிடைத்த மிகவும் அருமையான ஒரு திட்டத்தை நாம் கை நழுவிச் செல்ல விட முடியாது என்ற காரணத்தினால் நாம் அதிக கவனம் செலுத்துவது உண்மை இருப்பினும் அந்த திட்டத்தின் ஊடாக எந்தவிதமான ஒரு மோசடிக்கும் இடமளிக்க முடியாது.
இத் திட்டம் தொடர்பில் வெளியில் விமர்சனம் செய்வது தொடர்பில் எமது கவனத்திற்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் இத் திட்டம் தொடர்பில் எவ்வாறாயினும் எமது மாவட்டத்தில் எந்த பிரதேச செயலாளர் பிரிவிலும்
எந்த ஒரு வீதியிலும் மோசடி இடம்பெற்றதாகவும் அல்லது அதிகாரிகளின் தலையீட்டினால் தவறான வழியில் செல்வதாகவும் கருதினால் அது தொடர்பில் எனது கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வர முடியும் அவ்வாறு கொண்டு வரப்பட்டால்
அது தொடர்பில் உடனடியாக இறுக்கமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எது எவ்வாறு இருப்பினும் இந்த நாள் வரையில் குறித்த திட்டம் தொடர்பில் எனது கவனத்திற்கு எந்த ஒரு விதமான முறைப்பாடுகளும் கொண்டுவரப்படவில்லை என்றார்.