பிரதேச செயலருக்கு எதிராக 58 குற்றச்சாட்டு..! அத்தனையும் புஸ்வாணமானது. அவமானப்பட்டாரா ஜி.ரி.லிங்கநாதன்..

ஆசிரியர் - Editor I
பிரதேச செயலருக்கு எதிராக 58 குற்றச்சாட்டு..! அத்தனையும் புஸ்வாணமானது. அவமானப்பட்டாரா ஜி.ரி.லிங்கநாதன்..

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினா் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட 58 குற்றச்சாட்டுகளையும் முன்கொண்டு செல்வதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்கள் பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தாகவும் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் வீட்டை லிங்கநாதன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடந்த ஆண்டு ஓர் மிகப்பெரும் கோவை நடித்திருந்தார் அவ்வாறு கையளிக்கப்பட்ட கூவையிலே 

58 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சில நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக இருந்தாலும் இவை லஞ்ச ஊழல் உடன் தொடர்புபட்ட வையாக இல்லாத காரணத்தினால் லஞ்ச ஒழிப்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன் கொண்டு செல்ல முடியாது.

என குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஒப்பமிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இதே நேரம் இவ்வாறு பிரதேச செயலாளருக்கு எதிராக வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை போன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேச செயலாளரை 

உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வைத்திருந்த நிலையில் குறித்த எழுத்துமூல பதில் கிடைத்தது என்று அனைத்து கிடைத்த பதிலை பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளரின் கவனத்துக்கும் கொணசென்றுள்ளார். இதன் காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு 

வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றம் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதன் ஓர் பிரதி சமர்ப்பிக்கப்பட்டதனை உறுதி செய்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு