தம்பியின் கத்திக்குத்துக்கு இலக்கான அண்ணன் உயிரிழப்பு..! தம்பியை கைது செய்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor
தம்பியின் கத்திக்குத்துக்கு இலக்கான அண்ணன் உயிரிழப்பு..! தம்பியை கைது செய்தது பொலிஸ்..

காலி மாவட்டம் எல்பிட்டிய பகுதியில் தம்பியின் கத்திக்குத்துக்கு இலக்கான அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில், தப்பியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

எல்பிட்டி - மைத்திரிகம - கணேகொட பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவிலே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

உயிரிழந்த நபர் தினந்தோறும் மது போதையில் வந்து அவரின் தாயாரை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் அவர் நேற்றையதினம் இவ்வாறு மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது தயாரை தாக்கியுள்ளார்.இதனை அவதானித்த உயிரிழந்தவரின் இளைய சகோதரன் இ கூரிய ஆயுதத்தில் தாக்கியுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மைத்திரிகம - கணேகொட பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே சாந்த புஷ்ப குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளைய சகோதரனை கைது செய்துள்ள பொலிஸார் இ மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio