பிரதமர் வருகைக்காக தயாராகிறது மயிலிட்டி..! 1ம் கட்ட பணிகள் பூர்த்தி..

ஆசிரியர் - Editor
பிரதமர் வருகைக்காக தயாராகிறது மயிலிட்டி..! 1ம் கட்ட பணிகள் பூர்த்தி..

மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் முதல் கட்ட புனரமைப்பு வேலைகள் முடிந்த நிலையில் 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை வியாழக்கிழமை (15) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வு காலை 9.30 மணியளவில் இடம்பெற்றவுள்ளது.

அத்துடன் மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் மயிலிட்டி வடக்கில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் அமைக்கப்படும் வீடுகளில் கட்டி முடிக்கப்பட்ட 6 வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக பிரதமர் கையளிக்கவுள்ளார். 

இந்நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.


Radio
×