செஞ்சோலை சிறுவர்களின் மிலேச்ச தனமான படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்..

ஆசிரியர் - Editor
செஞ்சோலை சிறுவர்களின் மிலேச்ச தனமான படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில்..

இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது. 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்த கொண்டு உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினர்.


Radio