மயிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்படுகிறது..! நாளை வருகிறார் பிரதமர்..
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்திருக்கின்றார். பிரதமருடன் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது.
வவுனியாவுக்கு வரும் தலைமை அமைச்சர்இ வவுனியா மருத்துவமனையில் இரண்டாவது சுகா தாரத் துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கவுள்ளார்.
அத்துடன் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ளஇ இலகுக் கடன் உதவியில் அமைக்கப்பட வுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் நட வுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினஇ நெதர்லாந்துத் துணைத் தூதுவர் ஈவா வான்வோசம்இ வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தலைமை அமைச்சர் வருவதையிட்டு வவுனியா மருத்துவனைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலை யங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர். பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவ டிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலிசாரால் மேற்கொள்ள பட்டிருந்தன.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கும் வரவுள்ளார். யாழ்ப் பாணத்துக்கு வரும் அவர் யாழ்ப்பாணத்திலும் பல அபிவிருத்தித் திட்டங் களை ஆரம்பிக்கவுள் ளார்.
வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தைத் மக் களுடைய பாவனைக்குக் கையளிப்பார். இந்திய நிதியுதவில் அமைக்கப் பட்டுவரும் யாழ்ப்பா ணக் கலாசார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்று தெரி விக்கப்பட்டது.