நல்லூர் ஆலய பாதுகாப்பு ஒழுங்குகளை நேரில் பார்வையிட்டார் இராணுவ தளபதி..
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க நேரில் ஆராய்ந்துள்ளதுடன், வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்திற்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆராய்ந்ததுடன்,
இராணுவ அதிகாரிகளுடனும் பேசினார். தொடர்ந்து கந்தசுவாமி ஆலயத்தல் வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டிருக்கின்றார்.