நல்லுாா் கந்தனுக்கே புலுடா விட்டாரா ஆளுநா்..? ஸ்கானா் இயந்திரங்கள் எங்கே மக்கள் விசனம்..
நல்லுாா் கந்தசுவமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்திற்கு வரும் பக்தா்களை தொட்டு சோதனை செய்யும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் ஸ்கானா் இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பொருத்தவுள்ளதாக ஆளுநா் சுரேன் கூறியிருந்தாா்.
ஆனாலும் 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் ஸ்கானா் இயந்திரம் பொருத்தப்படவில்லை. என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். அங்கு ஏராளமான பக்தர்கள் கூடுவர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும்
சோதனைக் கெடுபிடிகள் குறைவில்லை. அதனால் பொலிஸாரின் சோதனைக்குப் பக்தர்கள் மட் டுமன்றி பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில்
பொலிஸார் உடற்பரிசோதனை யில் ஈடுபடுவதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்ற னர். கடந்த எட்டாம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடத்திய செய்தியாளர் சந் திப்பில், உடற்பரிசோதனை நிறுத்தப்பட்டு
இயந்திரம் ஊடான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.