கனடாவிலிருந்து வந்தவா் 35 பவுண் நகை, 10 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தாா்..! முகமூடி அணிந்த கொள்ளையா்கள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor
கனடாவிலிருந்து வந்தவா் 35 பவுண் நகை, 10 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தாா்..! முகமூடி அணிந்த கொள்ளையா்கள் அட்டகாசம்..

எழுதுமட்டுவாள் பகுதியில் முகங்களை மறைத்தவாறு வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் ஒருவாின் 35 பவுண் நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாளில் உள்ள 

உறவினர் வீட்டில் தங்கியுள்ளார் அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, 

பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமானப்பணி வேலைகளுக்காக கனடா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் 

வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Radio
×