கோத்தாவின் பெயரை கூறி யாழ்.தாவடியில் ரவுடிகள் அட்டகாசம்..! தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல்.
ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்ஸ அறிவிக்கபட்டதை தொடா்ந்து தாவடி சந்தி பகுதியில் வெடி கொழுத்தியவா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டதாகவும், அதனை தட்டிகேட்டவா்களுடன் சண்டித்தனம் செய்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிகள் கொழுத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பல்வேறு சந்திகளிலும் இவ்வாறு வெடிகள் கொழுத்தப்பட்டன.
தாவடிப் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் ஏற்பாட்டில், தாவடிச் சந்திப் பகுதியிலும் வெடிகள் கொழுத்தப்பட்டன. வீதியின் நடுவே வெடிகள் கொழுத்தப்பட்டமையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் வெடி கொழுத்தியவர்களிடம்
கேள்வி எழுப்பியுள்ளனர். அது வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது. பின்னர் கைகலப்பு வரையில் சென்றுள்ளது. கைகலப்பு முடிந்த பின்னர் சுன்னாகம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளாகிய
பாதிக்கப்பட்ட தரப்பினர், பொலிஸ் நிலையம் வரையில் அலையத் தயாரில்லை என்று அந்தப் பகுதியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.