SuperTopAds

உயிருக்கு போரடியவரை காப்பாற்றுவதாக கூறி அழைத்து சென்று காட்டில் எறிந்துவிட்டு சென்ற காட்டுமிராண்டி..! பொலிஸாாிடம் சிக்கியது.

ஆசிரியர் - Editor I
உயிருக்கு போரடியவரை காப்பாற்றுவதாக கூறி அழைத்து சென்று காட்டில் எறிந்துவிட்டு சென்ற காட்டுமிராண்டி..! பொலிஸாாிடம் சிக்கியது.

தன்னுடைய வாகனத்தில் மோதி படுகாயமடைந்த வயதான முதியவரை காப்பாற்றுவதாக கூறி அழைத்து சென்று காட்டில் போட்டுவிட்டு தப்பி ஓடிய சாரதி பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் சிலாபம் - மஹவெவ – லுணவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பு - சிலாபம் வீதியில் மாரவில் - லன்சிகம பகுதியில் வேன் ரக வாகனத்தில் மோதுண்டு இவ்வாறு உயிரிழந்துள்ள நபர், 

உந்துருளியொன்றில் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த 81 வயதான வயோதிபர் என தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய வேன் ரக வாகனத்தின் சாரதி அதன்போது  உயிரிழந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி 

வாகனத்தில் ஏற்றியுள்ளார். எனினும் உயிரிழந்த நபரை லுனுவில பகுதியில் வனப்பகுதியொன்றில் சாரதி கைவிட்டு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரான சாரதி, தோப்புவ காவல்துறை சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குருநாகல் - அம்பன்பொல பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.