தமிழா்களின் வாக்குகள் இல்லாமல் ஒரு ஆணியும் பிடுங்கமாட்டாா் கோட்டா..! சுமந்திரன் நகைப்பு..
தமிழ் மக்களின் ஆதரவினை பெறாமல் கோட்டபாய ராஜபக்ஸ தோ்தலில் வெல்வது சாத்தியமற்ற ஒன்று என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.
கட்சி ஆதரவளார்களை தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,கோத்தாபய ரஜபக்ச நான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவேன் என்று தெரிவித்துள்ளார் இது சாத்தியமான விடயமாக நீங்கள் பார்க்கின்றீர்களா? அதற்கு பிறகு அவர் சொல்லியிருக்கின்றார்.
அவ்வாறு சொல்லவில்லை என்று அவ்வாறு சொன்னாரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது நேற்றைய உரையில் கூறியுள்ளார் தமிழ் மக்களுக்கு அபிலாசைகள் இருக்கின்றது அதனையும் நான் நிறைவேற்றுவேன் என ஏதோ சொல்லியிருக்கின்றார்.
அவர் தமிழ் மக்களின் ஆதரவின்றி நிச்சயமாக வெல்லமுடியாது ஆதனால்தான் முதலில் அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தற்போது அவரின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளார் போல் தெரிகின்றது.ஜக்கிய தேசியக்கட்சி சார்பாக சஜித்,
கருஜெயசூரிய இருவரில் யார் போட்டியிட்டால் யார் கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து வெற்றிபெறுவார் என நினைக்கின்றீர்கள் ?ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை தீர்மானிப்பது அது உட்கட்சி விவகாரம் ஆகும் இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது
ஆனபடியால் அதில் தாக்கல் செலுத்தும் படியான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்க முடியாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா இல்லையா? நாங்கள் யாரை ஆதரிப்பது யாரை ஆதரிக்காமல் விடுவது
யாரையும் ஆததரிப்பதா என்ற எந்த தீர்மானமும் இன்னும் எடுக்கவில்லை.அவ்வாறென்றால் மஹிந்த அரசாங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை கொண்டு வந்ததாக நீங்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள்.
ஆகவே நீங்கள் மஹிந்த சார்பான கோத்தாபய ராஜபக்சவை ஆரதரிக்க முடியுமா இல்லையா என தற்போது அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கமுடியாதா?அழுத்தம் திருத்தமாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான ஒரு கருத்தினை வெளியிடுவோம்
அந்த நேரம் இப்போதில்லை .உங்களது கோரிக்கைகளுக்கு கோத்தபாய ராஜபக்ச ஆதரவளித்தால் ஆதரவு வழங்குவீர்களா?நான் ஏற்கனவே சொன்னது போன்று ஆதரவு வழங்குவதா? இல்லையா என்ற தீர்மானங்கள்
எல்லாவற்றிக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கட்டும் எல்லா கட்சிகளும் தங்களின் கொள்கைகளை முன்வைக்கட்டும் நாங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் பேசுவோம் அதன் பின்னர்
நிதானமான ஒரு முடிவினை நாங்கள் எடுப்போம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மனோகணேசன், தயாகமகே உடன் உலங்கு வானூர்தியில் வந்து அரசாங்கத்தின் முடிவினை அறிவிக்கும்
போது தங்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஏற்பட்டது இது திட்டமிடப்பட்ட சதி என நீங்கள் அறிந்திருக்கவில்லையா?இதனை திட்டமிட்டசதியாக நான் பார்க்கவில்லை மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அதனை சிலர் உண்ணாவிரதமாக
வடிவமைத்திருந்தார்கள் அவர்களிடத்தில் போய் நிலைப்பாட்டை கூறினேன் அவ்வாறு கூறவேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது அதனையே நான் மேற்கொண்டேன். ஆந்த சூழ் நிலையை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தியிருக்கலாம்
என்னைப்பற்றி நாங்கள் சிந்திக்கப்போவதில்லை எங்களுக்கு இருக்கின்ற பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம். அவளவுதான் என இதன்போது பதிலளித்தார்.