110 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது..! 2.5 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்குங்கள்.. பணிப்பாளா் சத்தியமூா்த்தி கோாிக்கை.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு CT ஸ்கானா் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்ய 112.5 மில்லியன் ரூபாய் தேவைபடும் நிலையில், 110 மில்லியன் ரூபாய் நிதி சேகாிக்கப்பட்டிருக்கின் றது. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியுள்ளாா்.
இன்னும் 2.5 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இதற்கு நிதி சேகரிக்கப்படுகின்றது. நன்கொ டையாளர்களின் நிதிப் பங்களிப்பில் சி.ரி. ‘ஸ்கானருக்கு’ நிதி சேகரிக்கப்படுகின்ற விடயம் பற்றி சமூகவலைத் தளங்களில், ஊடகங்களில்
மாறுபட்ட கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என்றும் தெரிவித்த பணிப்பாளர், அது பற்றி விளக்க மளித்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பா ணப் போதனா மருத்துவமனையைப் பொறுத்தவரை
2 சி.ரி. ‘ஸ்கானர்கள்’ இருப்பது மிக அவசியம். ஓர் இயந்திரத்தை அரச நிதி ஊடாகப் பெற் றுக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இது தாமதமாகவே கிடைக்கும். ஆகவே நன்கொடையாளர்களின் உதவியில் சி.ரி. ‘ஸ்கானர்’ ஒன்றை
விரைவாகப் பொருத்தும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனைச் சேர்ந்த பி. ரஞ்சன் தற்போது 46 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் வசிக்கும் எஸ்.கதிர்காமநாதன் ரூபா 20 மில்லியன் வழங்கியிருக்கிறார்.மருத் துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதலோடு தரமான (160 ஸ்லைஸ்) சி.ரி. ஸ்கானரை ஜப்பானில் இருந்து தருவிப்பதற்காக
ரூபா 50 மில்லியன் நிதி 3 மாதங்களுக்கு முன்னர் முற்பணமாக வழங்கப்பட்டது. வரும் செப்ரெம் பர் மாதமளவில் நவீன சி.ரி. ‘ஸ்கானர்’ இயந்திரம் வந்தடையும்.எம்.ஆர்.ஐ. ‘ஸ்கான்’ இயந்திரம் முற்றுமுழுதாக அரசின் நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இது வந்துவிடும். – என்று பணிப்பாளரின் செய்திக் குறிப்பில் உள்ளது.