29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்.குடாநாட்டுக்கான பாாிய குடிநீா் திட்டம்..! ஜனாதிபதி தொடங்கிவைக்கிறாா்..
யாழ்.குடாநாட்டின் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள வடமராட்சி களப்பு குடிநீா் திட்டம் இம் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைய வேண்டிய
இந்தத் திட்டம் வனஉயிரிகள் திணைக்களத்தின் முட்டுக் கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குடிதண்ணீர்ப் பிரச்சினை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகின்றது. அதற்குப் பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இரணைமடுவிலிருந்து குடிதண்ணீரைக் கொண்டுவருதல், வடமராட்சி கிழக்கிலிருந்து கடல் நீரை நன்னீராக்குதல் என்று பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டபோதும்,
அதிலுள்ள அரசியல் இழுபறிகள் காரணமாக எந்தவொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.