SuperTopAds

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை..” என்பதுபோல் ஆளுநாின் செயற்பாடுகள் அமைந்துள்ளது..! கணேஷ் வேலாயுதம் காட்டம்..

ஆசிரியர் - Editor I
“எங்கப்பன் குதிருக்குள் இல்லை..” என்பதுபோல் ஆளுநாின் செயற்பாடுகள் அமைந்துள்ளது..! கணேஷ் வேலாயுதம் காட்டம்..

மொழிபெயா்ப்பு தாமதத்தை காரணம் காட்டி இரணைமடு அனா்த்தம் தொடா்பான அறிக்கையை தாமதப்படுத்தும் ஆ ளுநா் சுரேன் ராகவன், அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தவறு செய்த அதிகாாிகளை தண்டித்தாரா? 

அல்லது அவருக்கு ஆங்கிலம், சிங்களம் தொியாதா? என மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளா் நாயகம் கணேஷ் வேலாயும் கேள்வி எழுப்பியுள்ளாா். மேற்படி விடயம் தொடா்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் 

கலந்து கொண் டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், இது வரையில் எவரும் சொல்லாத புதிய கதை ஒன்றை இப்போது ஆளுநா் கூறிக் கொண்டிருக்கின்றாா். 

அதாவது இரணைமடு அனா்த்தம் தொடா்பான ஆய்வு அறிக்கையினை வெளியிடுங்கள் என கேட்டோம். மொழிபெயா்ப்பு கிடைக்கவில்லை என்றாா். அதற்குள் அப்பால் சென்று கிடைத்த அறிக்கையின் அடைப்படையில் அதி காாிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 

அனா்த்தம் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய அரச அதிகாாிக்கு வேறு பிரதேசத்தில் நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது. அங்கும் இரணைமடுவுக்கு ஒப்பான பாாிய அபிவிருத்தி நடக்கவுள்ளது. ஆகவே பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் 

தொடா்பான விசாரணை அறிக்கைகிடைத்தபோதும் அதனடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத ஆளுநா் மொழிபெயா்ப்பு கிடைக்கவில்லை. என கூறுவது இதுவரை யாரும் சொல்லாத ஒரு பதில். 

அப்படியானால் ஆளுநா் அறிக்கையை படிக்கவில்லையா? அல்லது ஆளுநா் ஆங்கிலம், சிங்களம் அறியாதவரா? என கேள்வி எழுப்பியதுடன், ஆளுநரே ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி யில் ஊழல் நடந்துள்ளது என்பதை கூறியிருக்கின்றாா். 

அப்படி இருந்தும்,வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் மூலம் தவறிழைத்தவா்களை தண்டிக்காதது ஏன்? என அவா் மேலும் கேள்வி எ ழுப்பியிருக்கின்றாா். இதேபோல் அறிக்கையை தாமதம் இல்லாமல் உடனடியாக வெளியிடவேண்டும் எனவும் 

அவா் கேட் டுள்ளதுடன், வடக்கில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் பல முறைகேடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை தொ டா்பாகவும் உாிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றாா்.