பல்லாயிரம் மக்களின் மகிழ்ச்சி கூச்சலுக்கு நடுவில் கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
பல்லாயிரம் மக்களின் மகிழ்ச்சி கூச்சலுக்கு நடுவில் கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்..

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவே என சற்று முன் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸவால் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக 

மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். இந்த மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு