யாழ்.மாநகர முதல்வா் ஆனல்ட் அமைச்சா் சஜித் பிறேமதாஸவிடம் முன்வைத்தகோாிக்கை..! நிறைவேற்றப்படுமா?
யாழ்ப்பாணம் குருநகர்ப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்துமாடிக் கட்டிடத் தொகுதியைப் புனரமைத்து தருமாறு மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ்.வந்த வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசா யாழ்.பிரதான வீதியிலுள்ள மார்ட்டினார் குருமடத்தின் புனரமைப்பை பணியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில வைத்தே மாநகர முதலரவர் அமைச்சரிடம் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக மாநகர முதல்வர் ஆர்னோலட் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் மாநகர முதல்வராக சில விடயங்களை நான் பேசியிருக்கின்றேன். அதில் முக்கியமாக அவருடைய தகப்பனார்
வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட பத்து இலட்சம் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஐந்து மாடி என்று சொல்லுகின்ற யாழ்.குருநகரில் உள்ள ஐந்துமாடி வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்.
ஆயினும் தற்போது அந்த வீடுகளின் ஒருபகுதி கட்டிடத் தொகுதி உடைந்து நொருங்குகின்ற நிலையில் உள்ளதால் அங்குள்ள அனைத்து மக்களையும் அங்கிருந்த வேறு இடத்திற்குச் செல்லுமாறு கட்டிடத் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது உங்கள் தந்தையின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது பழுதடைந்து உடைகிற நிலையில் இருக்கிறது. ஆகவே அதனை உங்கள் அமைச்சினூடாக மீள் புனருத்தானம் செய்து கொடுத்து அந்த மக்களுக்கு மீள வாழ்வு வழங்கும்படி கோரியிருக்கின்றேன்.
அதேபோன்று தற்போது கரையோரங்களில் இருக்கின்ற மக்கள் வீடு வசதியின்றி இருக்கின்றார்கள். அந்த மக்களுக்கு இரண்டு மூன்று மாடிக் கட்டிடங்களை கொண்டதாக வீட்டுத் தொகுதிகளை அமைத்துக் கொடுப்பதன் ஊடாக
அந்த மக்களுக்கும் உரிய வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியிருந்தேன். இதனையெல்லாம் கேட்டுக் கொண்ட அமைச்சர் இவை தொடர்பில் முறையான திட்டத்தை சமர்ப்பிக்கும் படி கூறியிருக்கின்றார்.
அதனடிப்படையில் அவ்வாறான திட்டத்தை சமர்ப்பிக்க யோசித்துள்ளோம் என்றார்.