ஜக்குவாா் காா் வாங்கி கொடுக்கவில்லையாம்.. பீ.எம்.டபிள்யூ காரை ஆற்றில் போட்ட இளைஞன்..!

ஆசிரியர் - Admin
ஜக்குவாா் காா் வாங்கி கொடுக்கவில்லையாம்.. பீ.எம்.டபிள்யூ காரை ஆற்றில் போட்ட இளைஞன்..!

இந்தியாவின் அாியானா மாநிலத்தில் உள்ள இளைஞா் ஒருவா் தனது தந்தையிடம் ஜக்குவாா் காா் ஒன்றை வாங்கி தருமாறு கேட்டிருக்கின்றாா். ஆனாலும் தந்தை அதற்கு மறுத்த நிலையில் கோபத்தில் தன்னிடமிருந்து பீ.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளியுள்ளாா். 

அத்தோடு நின்றுவிடாமல் தன் காரை ஆற்றில் தள்ளுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங் களில் பதவிவேற்றி தன்னுடைய ஆத்திரத்தை தணித்துள்ளாா்.  நீரில் மிதந்து சென்ற கார் ஆற்றின் நடுவில் இருந்த புற்களில் சிக்கி நின்றது.

இதையடுத்து உள்ளூர் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் காரை வெளியே கொண்டு வர அந்த இளைஞர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

35 லட்சத்துக்கும் மேற்பட்ட விலையுடைய காரை ஆற்றில் தள்ளிய இளைஞரின் தந்தை, மிகப்பெரிய நிலக்கிழார் எனக் கூறப்படுகிறது.

Radio